தேர்வோ, இன்டர்வியூவோ கிடையாது… 10ஆம் வகுப்பு மார்க் போதும்! தபால் துறையில் 40,000 காலியிடங்கள்? ரெடியாகும் மெகா அறிவிப்பு!

Published On:

| By Santhosh Raj Saravanan

india post gds recruitment 2026 notification 10th pass govt job

“கவர்மெண்ட் வேலைக்குப் போகணும்னு ஆசை… ஆனா, டிஎன்பிஎஸ்சி (TNPSC), யுபிஎஸ்சி (UPSC) மாதிரி உட்கார்ந்து படிக்கவெல்லாம் எனக்குப் பொறுமை இல்லை பாஸ்! படிச்ச மார்க்கை வச்சு வேலை கிடைச்சா எப்படி இருக்கும்?” அப்படி ஒரு மேஜிக் நடந்தா சும்மாவா விடுவோமா? இதோ, லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்துக்கொண்டிருக்கும் அந்த ‘மேஜிக்’ அறிவிப்பு விரைவில் வெளியாகப்போகிறது.

இந்தியத் தபால் துறை (India Post), கிராமப்புற அஞ்சல் ஊழியர் (GDS – Gramin Dak Sevak) பணியிடங்களுக்கான 2026ஆம் ஆண்டுக்கான அறிவிப்பை வெளியிடத் தயாராகி வருகிறது.

ADVERTISEMENT

தேர்வு இல்லை, நேர்காணல் இல்லை… வெறும் 10ஆம் வகுப்பு மதிப்பெண் போதும் என்பதுதான் இதன் ஸ்பெஷல்!

எதிர்பார்க்கப்படும் காலியிடங்கள்:

ADVERTISEMENT

வழக்கமாகத் தபால் துறை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் ஆட்களைத் தேர்வு செய்யும். அந்த வகையில், 2026ஆம் ஆண்டிற்கான அறிவிப்பில் நாடு முழுவதும் சுமார் 40,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் கணிசமான இடங்கள் ஒதுக்கப்படும்.

என்னென்ன வேலைகள்?

ADVERTISEMENT

கிராமப்புற அஞ்சல் நிலையங்களில் கீழ்க்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • பிபிஎம் (BPM – Branch Postmaster): கிளை அஞ்சலகத்தை நிர்வகிப்பது, பொதுமக்களுக்குச் சேவைகளை வழங்குவது.
  • ஏபிபிஎம் (ABPM – Assistant Branch Postmaster): தபால் விநியோகம் மற்றும் அஞ்சல் அதிகாரிக்கு உதவுவது.
  • டாக் சேவக் (Dak Sevak): தபால்களைக் கொண்டு சேர்ப்பது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

  • கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடங்களில் தேர்ச்சி அவசியம்.
  • மொழி அறிவு: விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி (Local Language) தெரிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் விண்ணப்பிக்கத் தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம்.
  • கூடுதல் தகுதி: சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் (இப்போதெல்லாம் டூ-வீலர் ஓட்டத் தெரிந்தாலே போதுமானது). கணினி அறிவு (Computer Knowledge) இருப்பது நல்லது.

வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் எவ்வளவு?

வேலை நேரம் குறைவு என்றாலும், கௌரவமான சம்பளம் கிடைக்கும்.

பிபிஎம் (BPM): ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை.

ஏபிபிஎம் (ABPM) / டாக் சேவக்: ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை. (இது அடிப்படை ஊதியம் மட்டுமே, படிகள் தனி).

தேர்வு முறை (Selection Process):

இதுதான் ஹைலைட்! எந்தவித எழுத்துத் தேர்வும் கிடையாது. நீங்கள் 10ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் (Merit List) தயார் செய்யப்பட்டு, அதன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். யாருக்கு அதிக மார்க் இருக்கோ, அவங்களுக்கு வேலை!

தேர்வு எழுதப் பயப்படுறவங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஆனா ஒரு விஷயம்… இதுல ‘கட்-ஆஃப்’ (Cut-off) எப்பவுமே உச்சத்தில்தான் இருக்கும். 10ஆம் வகுப்புல 450 மார்க்குக்கு மேல எடுத்தவங்களுக்குத்தான் அதிக சான்ஸ்.

விண்ணப்பிக்கும்போது ஒரு முக்கியமான ட்ரிக் இருக்கு… முடிஞ்ச வரைக்கும் அதிகமான இடங்களுக்கு (Circle/Divisions) விருப்பம் தெரிவியுங்க. உதாரணமா, உங்க சொந்த ஊர்ல மட்டும் அப்ளை பண்ணாம, பக்கத்து மாவட்டங்கள்ல கொஞ்சம் கிராமப்புறமா இருக்கிற இடங்களைத் தேர்ந்தெடுத்தா, போட்டி குறைவா இருக்க வாய்ப்பிருக்கு. நோட்டிபிகேஷன் வந்ததும் முதல் ஆளா அப்ளை பண்ணிடுங்க. மார்க் கம்மியா இருக்குனு கவலைப்படாம முயற்சி பண்ணுங்க, அதிர்ஷ்டம் அடிக்கலாம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share