பி.எட் படிப்பில் சேர விரும்புபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Kavi

Important announcement for join B.Ed. course

பிஎட் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைனிலேயே தாங்கள் படிக்க விரும்பும் கல்லூரியை தேர்வு செய்துகொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் பி.எட் மாணவர்கள் சேர்க்கை நேரடி கலந்தாய்வின் மூலம் நடைபெற்று வந்தது.

ADVERTISEMENT

இதனால் வெளி ஊர்களில் இருந்து மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களுடன் சென்னைக்கு வந்து கலந்தாய்வில் கலந்து கொள்ளும் நிலை நேரிட்டது. இதனால் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இந்தநிலையில் இந்த ஆண்டு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு பி.எட். மாணாக்கர் சேர்க்கை இணைய வழியில் நடத்திட உயர்க்கல்வித் துறை முடிவெடுத்தது.

ADVERTISEMENT

இதற்கான விண்ணப்பங்கள் 20.062025 முதல் 21.07.2025 வரை இணைய வழியில் பெறப்பட்டன.

557 ஆண்கள் 2983 பெண்கள் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3545 நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

ADVERTISEMENT

பின்னர் 31.07.2025 அன்று தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 900 இடங்களும், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 1140 இடங்கள் என 21 கல்வியியல் கல்லூரிகளில் 2040 இடங்கள் உள்ளன.

இணைய வழியில் இன்று (ஆகஸ்ட் 4) முதல் 09.08.2025 மாலை 5.00 வரை மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லுரியைத் தேர்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்கள் உள்நுழைவு ID மூலம் www.lwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக தங்கள் விருப்ப கல்லூரியைத் தேர்வு செய்யலாம் என்று உயர்க்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share