சந்திர கிரகணம் : திருப்பதி முதல் சதுரகிரி வரை கோயில்கள் நடை திறப்பு நேர விவரம்!

Published On:

| By Kavi

நாளை சந்திர கிரகணம் நிகழவிருப்பதால்  முக்கிய கோயில்களில் நடை சாத்தப்படவுள்ளது. 

நாளை (மார்ச் 3)  இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது.  

ADVERTISEMENT

இதையொட்டி முக்கியக் கோயில்கள் நடை சாத்தப்படும் மற்றும் திறக்கப்படும் நேரங்கள் குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம். 

* கிரகணம் ஆரம்பம்: பிற்பகல் 3:20 மணி

ADVERTISEMENT

*கிரகணம் முடிவு: மாலை 6:47 மணி

இதனால்,  திருப்பதி ஏழுமலையான்  கோயில் நடை காலை 9 மணிக்கு சாத்தப்பட்டு இரவு 7.30 மணிக்கு திறக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் நடை பிற்பகலில் இருந்து மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் – காலை 8 .30 மணி  முதல் இரவு 7.30 மணி வரை

தஞ்சை பெரிய கோயில் காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் காலை 8.20 முதல் இரவு 7.30 வரை

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் –  நாள் முழுவதும்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை  நடை சாத்தப்படும். 

கிரகணம் முடிந்ததும் அனைத்துக் கோயில்களிலும் பரிகார பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share