தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்: முதல் நாளிலேயே 9,919 மாணவர்கள் ஆப்செண்ட்!

Published On:

| By Pandeeswari Gurusamy

CBSE exams

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 2) தொடங்கிய நிலையில், முதன்மைப் பாடமான தமிழ் மொழித் தேர்வை 9,919 மாணவர்கள் எழுதவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை பாடத்திட்டத்தைப் பின்பற்றக்கூடிய பள்ளிகளுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் தொடங்கியது. இத்தேர்வினை எழுத மாநிலம் முழுவதும் மொத்தம் 8,16,289 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

ADVERTISEMENT

தேர்வு எழுதியவர்களின் விவரம்:

இன்று நடைபெற்ற முதல் தேர்வில், பள்ளிகள் மூலமாக 7,99,692 மாணவர்களும், தனித்தேர்வர்களாக (Private Candidates) 16,597 மாணவர்களும் பங்கேற்றுத் தேர்வை எழுதினர்.

ADVERTISEMENT

ஆப்செண்ட் விவரம்:

விண்ணப்பித்தவர்களில் கணிசமான மாணவர்கள் முதல் நாளிலேயே தேர்வு எழுத வராதது கல்வித் துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் பள்ளி மாணவர்கள் 8,319 பேர், தனித்தேர்வர்கள்: 1,600 பேர் என மொத்தம் 9,919 பேர் தேர்வு எழுதவில்லை. இது கல்வித்துறை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share