தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
அதன்பிறகு அரசியல் தலைவர்கள் எல்லாம் கரூர் செல்ல விஜய் தனி விமானம் மூலம் சென்னை வந்துவிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்கவில்லை, பேட்டி கொடுக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்று தனது எக்ஸ் பக்கத்தில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ளார் விஜய்.
அதில், பலி வாங்க வேண்டுமென்றால் என் மீது கை வையுங்கள்… தொண்டர்கள் மீது வேண்டாம். கூடிய விரைவில் உங்களை சந்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.