திருச்சி- சென்னை விமான சேவை தொடங்கியது!

By Balaji

|

Published on 31 Aug 2017, 12:00 AM

முதல்முறையாக திருச்சியிலிருந்து சென்னைக்கு, சிறியரக விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் இன்று(ஆகஸ்ட் 31) தொடங்கியுள்ளது.

நாள்தோறும் திருச்சியில் இருந்து சென்னைக்கு காலை 11.40 மணி, மாலை 6.20 மணி, இரவு 9.40 என மூன்று நேரங்களில் சேவைகளை ஜெட் ஏர்வேஸ் விமானம் அளித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில்,ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ‘அலையன்ஸ் ஏர்’ நிறுவனத்தின் சார்பில் சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரை, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு 30 ஆம் தேதி முதல் தினசரி புதிய விமான சேவைகள் தொடங்கப்படும். சென்னையில் இருந்து திருச்சிக்கு 31 ஆம் தேதி புதிய விமான சேவைகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று திருச்சி முதல் சென்னை வரை விமான சேவையை திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தொடங்கி வைத்தார். 70 இருக்கைகள் கொண்ட இந்த சிறிய ரக விமானம் இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு திருச்சிக்கு 8.40க்கு வந்தடைந்தது. அந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தினமும் காலை 7.35 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு காலை 8.35 மணிக்கு திருச்சி வந்தடையும். மீண்டும் திருச்சியில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு 10.35 மணிக்கு சென்னை சென்றடையும்.

ADVERTISEMENT

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமானசேவை மட்டுமன்றி துபாய், சவுதி அரேபியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் சேவை அளிக்கப்படுகிறது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel