நடத்தையின் மூலம் வீரர்களின் மரியாதை மற்றும் விசுவாசத்தைப் பெறுவதே கேப்டனின் முதன்மையான சவால் என்று தோனி தெரிவித்துள்ளார். How to win the loyalty of the players?
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதும் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அடிக்கடி சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறார்.
அந்த வகையில் நேற்று (பிப்ரவரி 9) தனியார் நிறுவன விழாவில் பங்கேற்ற தோனியிடம் ‘ஒரு கேப்டனாக சக வீரர்களின் மரியாதையை பெறுவது எப்படி? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு தோனி, “விசுவாசமும் மரியாதையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. ஒரு கேப்டன் தனது அணி உறுப்பினர்கள் மற்றும் டிரஸ்ஸிங் ரூமில் உள்ள துணை ஊழியர்களின் மரியாதையை வெல்ல முடியாவிட்டால், விசுவாசம் கேள்விக்குறியாகிவிடும்.
இது உண்மையில் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை பற்றியது அல்ல. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பற்றியது. நீங்கள் உண்மையில் எதுவும் பேசாமல் இருக்கலாம், ஆனால் உங்கள் நடத்தையால் அந்த மரியாதையைப் பெறலாம்.
ஒரு கேப்டனாக மரியாதையை சம்பாதிப்பது முக்கியம் என்று நான் எப்போதும் உணர்ந்தேன். அது நாற்காலி அல்லது பதவியுடன் வராது. அது உங்கள் நடத்தையால் வருகிறது.
சுருக்கமாகச் சொல்வதென்றால், மரியாதையைக் கட்டளையிட்டு பெற முயற்சிக்காதீர்கள், ஆனால் அதை உங்கள் நடத்தையால் பெறுங்கள். அது மிகவும் இயற்கையானது. நீங்கள் வீரர்களின் விசுவாசத்தைப் பெற்றால், அணியின் செயல்திறன் அதிகரிக்கும்.
https://twitter.com/ishanjoshii/status/1756166561629602064
ஆனால் அதற்கான முதல் படி, டிரஸ்ஸிங் ரூமில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் பலம் மற்றும் பலவீனங்களையும் புரிந்துகொள்ள வேண்டும்.
வீரர்கள் சில சமயங்களில் பாதுகாப்பற்றவர்களாக இருப்பார்கள். சில சமயங்களில், அணி அவர்களை நம்பினாலும், அவர்கள் தங்களை நம்பாமல் இருப்பார்கள். சிலர் அழுத்தத்தை விரும்புவார்கள். சிலர் அழுத்தத்தை விரும்புவதில்லை. எனவே ஒரு வீரரின் பலம் மற்றும் பலவீனங்களை நீங்கள் புரிந்துகொள்வது மிக முக்கியமானது.
அப்படி செய்தால் எந்த ஒரு வீரரையும் தன்னம்பிக்கையுடன் ஆட்டத்தில் பங்கேற்க செய்ய முடியும். அவர்களின் நம்பிக்கையையும் பெற முடியும்” என்று தோனி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வெற்றியை அறிவித்த ஷெரீப், இம்ரான் : பாகிஸ்தான் தேர்தல் முடிவில் குழப்பம்!
முறிந்த நட்பு மீண்டும் தொடர என்ன செய்ய வேண்டும்?
How to win the loyalty of the players?