ஹெல்த் டிப்ஸ்: அடிக்கடி ஜூஸ் குடிப்பவரா நீங்கள்? இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

Published On:

| By christopher

உச்சந்தலையில் சுள்ளென அடிக்கும் வெயிலுக்கு இதமாக  ஜில்லுன்னு ஒரு ஜூஸ் குடித்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், அடிக்கடி ஜூஸ் குடிப்பதும் ஆபத்தே என்கிறார்கள் மூத்த உணவியல் ஆலோசகர்கள்.

வீடுகளில் அல்லது கடைகளில் தயாரிக்கும் ஜூஸ், புராசெஸ்டு ஜூஸ், பவுடர் ஜூஸ் என ஜூஸ்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இந்த ஜூஸ் வகைகளில் பவுடர் ஜூஸ் மற்றும் புராசெஸ்டு  ஜூஸ்களை முடிந்த அளவுக்குத் தவிர்ப்பது  நல்லது.

‘அப்படியானால் வீட்டில் தயாரிக்கும் ஜூஸை எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாமா?’ என்றால் அதற்கும் அளவுகள் உண்டு.

ஒரு நாளில் ஆண்கள் இரண்டு கப் ஃப்ரெஷ் ஜூஸும், பெண்கள் ஒன்றரை கப் ஜூஸும் குடிக்கலாம். குழந்தைகளுக்கு ஒரு கப் ஜூஸ் மட்டும்தான் கொடுக்க வேண்டும். காரணம்… ஜூஸை பொறுத்தவரை, அதில் வைட்டமின் மற்றும் மினரல்களை தவிர புரதச்சத்து மாதிரியான வேறு சத்துகள் அதிகம் இல்லை.

ADVERTISEMENT

இதனால் ஒரு நாளில் நாம் அதிக அளவில் ஜூஸ் எடுத்துக்கொண்டே இருந்தால் வேறு எதையும் சாப்பிட முடியாமல் போய்விடும். வேறு சத்தும் உடம்பில் சேராமல் போய்விடும்.

மேலும், வெறும் ஜூஸாகவே குடித்துக்கொண்டிருந்தால் உடல் எடை அதிகரிக்கலாம். மேலும், அதில் உள்ள ஃப்ரக்டோஸ் என்ற இனிப்புச்சத்து, பற்களின் எனாமலை பாதித்து பற்களை சொத்தை ஆக்கலாம்.

ADVERTISEMENT

எனவே… சர்க்கரை நோயாளிகள் ஜூஸாக குடிக்காமல் பழமாகச் சாப்பிடுவதுதான் நல்லது. இது அவர்களின் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கும்.

பழ ஜூஸ்களில் சர்க்கரை சேர்க்காமல் புதினா, எலுமிச்சை பழங்களை சுவைக்குச் சேர்க்கலாம். சர்க்கரை சேர்ப்பதால் கலோரிகள் அதிகரிக்கும்.

வீட்டிலேயே ஜூஸ் தயாரிக்கும்போது பழங்களை சுத்தமாகக் கழுவ வேண்டும். மஞ்சள் தூள் கலந்த நீரில் கழுவலாம். சுத்தமான பாத்திரங்களையே  பயன்படுத்த வேண்டும். ஜூஸைத் தயாரித்த உடனே குடிக்கும்போதுதான் முழுச்சத்தும் கிடைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

என்னா அடி : அப்டேட் குமாரு

ஹெச்.டி. ரேவண்ணாவுக்கு 3 நாட்கள் எஸ்ஐடி காவல்!

நாளை வெளியாகும் பிளஸ் 2 ரிசல்ட்… எப்படி தெரிந்து கொள்வது?

அதுக்குள்ள இப்டியா? குக் வித் கோமாளியில் இருந்து விலகிய பிரபலம்.. ரசிகர்கள் ஷாக்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share