கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரையில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதர்வ் அர்ஜூனா பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை தவெக தலைவர் விஜய்யோ, ஆதவ் அர்ஜூனாவோ சந்திக்க செல்வதை தடுக்க கூடாது. அதேசமயம் கரூர் சம்பவத்திற்கு காவல்துறையே காரணம் என்றும் உள்ளூர் அரசியல் வாதிகள் குண்டர்கள் இணைந்து செயல்பட்டனர் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆதவ் அர்ஜூனா தரப்பில் அவரச வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துள்ளது.
உயர்நீதிமன்ற கிளை பதிவாளர் தரப்பில் ஆதவ் அர்ஜூனாவின் வழக்கறிஞரிடம் தற்போது விடுமுறை கால நீதிமன்றம் நடைபெற்று வருகிறது. இதனால் நாளை முறைப்படியஅன மனுதாக்கல் செய்யலாம். அப்படி செய்யும் பட்சத்தில் வரும் வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.