நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு: மருத்துவமனையில் விசாரித்த ஸ்டாலின்

Published On:

| By Mathi

Nallakannu Stalin

முதுபெரும் இடதுசாரித் தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார்.

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் 101 வயதாகும் நல்லகண்ணு. இடதுசாரி இயக்கத் தலைவரான நல்லகண்ணு முழு ஓய்வில் இருந்த நிலையில் அவரது உடல்நிலையில் திடீர் பாதிப்பு ஏற்பட்டது..

ADVERTISEMENT

இதனையடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 1-ந் தேதி முதல் நல்லகண்ணு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் இன்று பிப்ரவரி 23–ந் தேதி திடீரென பின்னடைவு ஏற்பட்டது.

இதனால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதனிடையே சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தார்; மேலும் மருத்துவர்களிடம் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களையும் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share