இந்த வங்கிகளில் அக்கவுண்ட் இருக்கா.. பேலன்ஸ் குறித்த கவலை இனி வேண்டாம்!

By Minnambalam Desk

|

Published on 11 Jul 2025, 1:50 PM

Bank Account Balace

பொதுத்துறை வங்கியான கனரா வங்கி உள்ளிட்ட 6 வங்கிகள் தங்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இனி குறைந்த பட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அதற்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் இனி ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளன. Bank Account Balace

பொதுவாக வங்கிகளில் குறைந்தபட்ச மாதாந்திர இருப்புத்தொகை பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த தொகையின் அளவு வங்கிக்கு வங்கி மாறுபட்ட நிலையில் இருந்தது. அதே சமயம் குறைந்த பட்ச இருப்புத்தொகையை பராமரிக்க தவறும் பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. குறைந்த பட்ச இருப்பு தொகை வைத்திருந்த வாடிக்கையாளர்களுக்கும் சேவை கட்டணம் வசூலிக்கும் போது இருப்புத்தொகை குறையும் சூழலில் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த விதி ஏழை, எளிய மக்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

ADVERTISEMENT

இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாரத ஸ்டேட் வங்கி குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத சூழலில் அபராதம் விதிக்கும் நடைமுறையை கைவிட்டுவிட்டது.

இந்த நிலையில் மற்றொரு பொதுத்துறை வங்கியான கனரா வங்கியும் ஜூன் மாதம் முதல் குறைந்தபட்ச மாதாந்திர இருப்புத் தொகையை பராமரிக்காவிட்டால் அபராதம் என்ற விதியை தளர்த்தி உள்ளது. இது கனரா வங்கியின் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

கனரா வங்கியை தொடர்ந்து , இந்தியன் வங்கி, பரோடா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிளும் மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிப்பு விதியை தளர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel