அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘ லப்பர் பந்து ‘ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் மிக முக்கியமான படங்களில் ஒன்று நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘ பார்க்கிங் ‘ . மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம் விமர்சகர்கள் மத்தியிலும் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது.
இந்த நிலையில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் ‘ லப்பர் பந்து ‘ . இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இதற்கு முன்பு ‘ கனா ‘ , ‘ சிகை ‘ , ‘ ஃஎப்.ஐ.ஆர் ‘ போன்ற படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் ஆவார்.
மேலும், இந்த திரைப்படத்தில் ‘ அட்டகத்தி ‘ தினேஷும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாளை (ஆக.28) இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. காளி வெங்கட், பாளை சரவணன், தேவதர்ஷினி, சுவாசிகா விஜய் ஆகிய நடிகர்கள் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, மதன் படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளார். ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ‘ டீசல் ‘ இயக்குநர் சசி இயக்கத்தில் ‘ நூறு கோடி வானவில் ‘ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா
அமெரிக்காவில் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என்னென்ன?
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024 : இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீராங்கனை!