2024 மகளிர் டி20 உலகக்கோப்பை வங்கதேசத்தில் நடைபெற இருந்த நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக அந்தத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இந்த தொடர் அக்டோபர் 3 அன்று துவங்கவுள்ள நிலையில், தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், பூஜா வஸ்திரக்கர், ரேணுகா சிங், ராதா யாதவ் உள்ளிட்ட அனுபவம் மிக்க வீராங்கனைகள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தயாளன் ஹேமலதாவும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

அதேபோல, ஷ்ரேயன்கா பாட்டில், சஜனா சஜீவன், யாஸ்திகா பாட்டியா, அருந்ததி ரெட்டி உள்ளிட்ட இளம் வீராங்கனைகளுக்கும் அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் அணியின் முழு விவரம்!
ஹர்மன்ப்ரீத் கவுர் (c), ஸ்மிருதி மந்தனா (vc), ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (wk), யாஸ்திகா பாட்டியா (wk), பூஜா வஸ்திரக்கர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஷ்ரேயன்கா பாட்டில், சஜனா சஜீவன்.
இவர்களில், யாஸ்திகா பாட்டியா மற்றும் ஷ்ரேயன்கா பாட்டில் ஆகியோர் உடற்தகுதி பரிசோதனையில் தேர்வு பெறும்பட்சத்தில், இறுதி அணியில் இடம்பெறுவார்கள் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்திய மகளிர் அணியின் அட்டவணை!
அக்டோபர் 4 – vs நியூசிலாந்து – துபாய்
அக்டோபர் 6 – vs பாகிஸ்தான் – துபாய்
அக்டோபர் 9 – vs இலங்கை – துபாய்
அக்டோபர் 13 – vs ஆஸ்திரேலியா – ஷார்ஜா
இதை தொடர்ந்து, அக்டோபர் 17, 18 ஆகிய நாட்களில், ஷார்ஜா, துபாய் ஆகிய நகரங்களில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து, அக்டோபர் 20 அன்று இறுதிப்போட்டி துபாயில் நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னதாக 2 வார்ம்-அப் போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி விளையாடவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 29 அன்று மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராகவும், அக்டோபர் 1 அன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் இந்திய மகளிர் அணி விளையாட உள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
‘தலை கொய்யப்படும்’ : எமர்ஜென்சி படத்தால் கங்கனா போலீசுக்கு சென்றது ஏன்?
அமெரிக்க பயணம்: அமைச்சர்கள், மா.செ.க்களுக்கு ஸ்டாலின் வார்னிங்!
துருபிடித்து, சில மாதங்களில் நட்டு போல்டு கழன்றுள்ளன… சிவாஜி சிலை உடைந்ததன் பின்னணி!