ஆர்சிபி அணியின் தோல்விக்கு காரணம் இதுதான்: ஹர்பஜன் ஓபன் டாக்!

Published On:

| By Selvam

பெங்களூரு அணியில் நல்ல பந்துவீச்சாளர்களை தேர்வு செய்யாதவரை அந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசன் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் ஆடி, 7 போட்டிகளில் தோல்வியும், 2-இல் வெற்றியும் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

கடைசியாக ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் தனது 2-ஆவது வெற்றியை பெங்களூரு அணி பதிவு செய்தது. நாளை (ஏப்ரல் 27) குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோத உள்ளது.

இந்தநிலையில், பெங்களூரு அணியின் தோல்விக்கான காரணம் குறித்து இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹர்பஜன்  சிங் கூறும்போது, “ஐபிஎல் ஏலத்தின் போது பேட்டிங், பெளலிங் என சம அளவில் வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். பேட்டிங் நன்றாக ஆடுவதால் மட்டும் பெங்களூரு அணி வெற்றி பெற்றுவிட முடியாது.

நீங்கள் நல்ல பெளலர்களையும் ஏலத்தில் எடுக்க வேண்டும். ஐபிஎல் போட்டியில் பந்துவீச்சு என்பது மிகவும் முக்கியமானது.

இந்திய வீரர்களை புரிந்துகொள்ளும் வகையில், இந்திய பயிற்சியாளர் ஒருவரை பெங்களூரு அணியில் பணியில் அமர்த்த வேண்டும். அவர் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் ஆடும் இளம் வீரர்களை அடையாளம் கண்டு அணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் ஆர்சிபி அணி எதிரணிக்கு கடுமையான டஃப் கொடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாஜகவிற்கு எதிரான ராஜபுத்திரர்களின் எழுச்சி…உத்திரப்பிரதேச ரிசல்ட்டை மாற்றுமா?

புது பட டிரைலரில் விஷால், சிம்புவை கலாய்த்த சந்தானம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share