பிரிந்தவர்கள் சேர்ந்தால் கட்சிக்கு நல்லது என்று எடப்பாடிக்கும் தெரியும் துக்ளக் ஆசிரியர் குரு மூர்த்தி தெரிவித்துளளார்.
அதிமுகவின் சீனியர் தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் 5) செய்தியாளர்களை சந்தித்து அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை அடுத்த 10 நாட்களுக்குள் ஒன்றிணைக்க வேண்டும் என கெடு விதித்துள்ளார். இது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி தந்தி டிவிக்கு அளித்துள்ள பேட்டியில், “செங்கோட்டையன் பேசியது கலகக் குரல் அல்ல.. அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சொல்வது எப்படி கலகமாகும்?
எடப்பாடிக்கு எதிராக ஏதாவது பேசி இருக்கிறாரா? நீங்கள் தலைவராக இருக்க கூடாது என்று சொன்னாரா?
பிரிந்தவர்கள் உங்கள் தலைமையில் சேர வேண்டும் என்று சொல்வது எடப்பாடிக்கு பெருமை தானே. அதில் எடப்பாடிக்கு விருப்பம் இல்லை என்பது தனி. இதில் செங்கோட்டையன் மீது தவறு இல்லை.
உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை கட்சியில் சேர்த்து அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் தவறு. அதை வேண்டுமானால் கலகம் எனலாம். செங்கோட்டையன் அப்படி சொன்னது போல் எனக்கு தெரியவில்லை.
பிரிந்தவர்கள் சேர்ந்தால் கட்சிக்கு நல்லது என்று எடப்பாடிக்கும் தெரியும். ஆனால் தனக்கு நல்லதா என்று தான் எடப்பாடி யோசிக்கிறார். அதுதான் எனக்கும் அவருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு” என்றார்
மேலும் அதிமுக உட்கட்சி பிரச்சனை பற்றி எதுவும் பேசாதீர்கள் என பாஜக தலைவர்களிடம் அமித்ஷா சொல்லி இருக்கிறார்.. அதிமுகவினர் ஒருங்கிணைய வேண்டும் என்பதும் அமித்ஷாவின் எண்ணம்.. அதைத்தான் பாஜகவினரிடம் சொல்லி இருக்கிறார் அமித்ஷா” என குருமூர்த்தி பேசினார்.