அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் நேற்று (அக்டோபர் 28) விக்கிபீடியாவுக்கு போட்டியாக க்ரோக்கிபீடியாவை அறிமுகம் செய்துள்ளார்.
விக்கிமீடியா அறக்கடளை என்ற தொண்டு நிறுவனம் நிர்வகித்து வரும் விக்கிபீடியா கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு உலகின் தகவல் களஞ்சியமாக செயல்படுகிறது. 300-க்கும் மேற்பட்ட மொழிகளில் தகவல்களை வழங்கி வரும் விக்கிபீடியா தளத்தில் சுமார் 6.5 கோடிக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
ஆனால் விக்கிபீடியாவில் தகவல்களை மனிதர்களால் திருத்தம் செய்ய முடியும் என்பதால் அரசியல் சார்பு அதில் உள்ளது என அமெரிக்க தொழிலதிபர் எலான்மஸ்க் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சார்பில்லாத பதிவுகளை பெறவே க்ரோக்கிபீடியாவை அறிமுகம் செய்வதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்கிபீடியாவை எலான் மஸ்க்கின் எக்ஸ் AI நிறுவனம் உருவாக்கி உள்ளது. இது 0.1 வெர்சன் தான் எனவும், இது விக்கிப்பீடியாவைவிட சிறப்பானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது அனைவருக்கும் இலவசமானது என்று மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
க்ரோக்கிபீடியாவில் அறிமுகமான முதல் நாளிலேயே பல்வேறு தலைப்புகளில் சுமார் 8,85,000 கட்டுரைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் விக்கிபீடியாவின் இடத்தை க்ரோக்கிபீடியா சமன் செய்யுமா? என்பது காலப்போக்கில் தெரியவரும் என இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
