சற்றே உயர்ந்த தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold and Silver rate on 29 October in chennai

சென்னையில் இன்று (அக்டோபர் 29) ஆபரணத்தங்கம் விலை ஒரு கிராம் ரூ.135 வரை உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 97,600-க்கு விற்பனையானது. ஆனால் தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு தங்கம் விலை அதிரடியாக குறையத் தொடங்கியது. நேற்று ஒரே நாளில் காலையில் ரூ.1200 , மாலையில் ரூ.1800 என ரூ.3000வரை குறைந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்றே உயர்ந்து ஒரு சவரன் ரூ.89,680 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று (அக்டோபர் 29) ஒரு கிராம் தங்கம் ரூ.135 உயர்ந்து ரூ.11,210 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,080 உயர்ந்து ரூ.89,680 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

வெள்ளி விலை இன்று ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.166 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ. 1000 உயர்ந்து வெள்ளி ரூ.1,66,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
28 -10-202588,600
27-10-202591,600
26-10-202592,000
25-10-202592,000
24-10-202591,200
23-10-202592,000
22-10-202592,320
21-10-202596,000
20-10-202595,360
19-10-202596,000
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share