73 வயது 51 முறை தண்டால் : வியக்கவைத்த ஆளுநர் ரவி

Published On:

| By Kavi

governor ravi done 51 pushups

ஆளுநர் ரவி தண்டால் எடுத்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. governor ravi done 51 pushups

இன்று (ஜூன் 21) உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.  இந்தியாவில் ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா என்ற கருப்பொருளில் 11ஆவது யோகா தினம் கொண்டாடப்பட்டது. 

ADVERTISEMENT

ஆந்திரப்பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தின் ஆர்.கே. கடற்கரையில் 3 லட்சம் பேர் கலந்துகொண்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகாசனம் செய்தார்.  ஆந்திர முதல்வர்  சந்திர பாபு நாயுடு உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

உத்தராகண்ட் மாநிலம், டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு யோகாசனம் செய்தார். 

ADVERTISEMENT

மதுரையில் ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில்  யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டு சூரிய நமஸ்காரம், வஜ்ராசனம், பிராணயாமம் போன்ற யோகாசனங்களை செய்தனர்.

அப்போது ஆளுநர் ரவி, 51 முறை விடாமல் தண்டால் எடுத்து அசத்தினார். 73 வயதாகும் அவர் தொடர்ந்து தண்டால் எடுத்தது பார்வையாளர்களை வியக்க வைத்தது.

ADVERTISEMENT

இதனை பார்த்த மாணவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு யோகாவின் பயன் குறித்து விளக்கி பேசினார் ஆளுநர் ரவி. தற்போது ஆளுநர் தண்டால் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.governor ravi done 51 pushups

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share