இன்று அமைச்சராக பதவியேற்றுள்ள பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடியின் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனையடுத்து பொன்முடிக்கு அமைச்சராக மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்தார். ஆனால், ஆளுநர் ரவி அதனை நிராகரித்தார்.
இதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. “பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று ஆளுநர் ரவி மறுப்பதற்கு அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என்று தலைமை நீதிபதி அமர்வு கடுமையான கேள்விகளை ஆளுநருக்கு எழுப்பியது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பொன்முடிக்கு பதவிபிரமாணம் செய்துவைக்க உச்சநீதிமன்றம் ஒருநாள் அவகாசம் வழங்கியது. இதனை தொடர்ந்து ஆளுநர் ரவி இன்று பொன்முடிக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும், முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று அமைச்சராக பதவியேற்கும் பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித்துறையை ஆளுநர் ரவி இன்று (மார்ச் 22) ஒதுக்கீடு செய்துள்ளார்.
அதேபோல அமைச்சர் காந்தி வசம் இருந்த கதர், கிராம தொழில் வாரியம் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கெஜ்ரிவால் கைதுக்கு அவரே காரணம் – முன்னாள் குரு அன்னா ஹசாரே
விருதுநகரில் விஜய பிரபாகர்: தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!