“என்னதான் வசதியான நாற்காலியில் உட்கார்ந்து வேலை பார்த்தாலும் ஒரே பொசிஷனில் தொடர்ந்து ஒரு வேலையைப் பார்ப்பது… எலும்பின் ஆரோக்கியத்துக்கு எதிரானது” என்கிறார்கள் எலும்பு சிகிச்சை மருத்துவர்கள். Good Sitting Posture for Work
“ஒரு மணி நேரத்துக்கு மேல் ஒரு பொசிஷனில் இருந்தபடி ஒரு வேலையைப் பார்க்க நேர்ந்தால், இடையில் சில நிமிடங்கள் அதிலிருந்து வெளிவந்து ரிலாக்ஸ்டு ஆக நடக்கலாம். பொசிஷன் மாற்றி அமரலாம். இதன் மூலம், ஒரே பொசிஷனால் ரத்த ஓட்டம் குறைந்த பகுதிகளுக்கு எல்லாம் மீண்டும் ரத்தம் சீராக செல்லும். நம்மால் அங்கே, இங்கே என உடல் பிடித்துக்கொள்ளாமல் நெகிழ்வுத்தன்மையுடன் வேலை பார்க்க இயலும்.
எலும்புக்குத் தேவை… வலிமை. அதற்கான முதல் வழி, சத்தான உணவுகள். கால்சியம், புரதம், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் நிரம்பிய முட்டை, பயறு வகைகள், எலுமிச்சை, ஆரஞ்சு, அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து பல வருடங்களாக ஒருவர் நல்லுணவில் இருந்து விலகியிருக்கிறார் என்றால், இறுதியில் அவர் மூட்டு சார்ந்த பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி வரும்.
அடுத்ததாக, பயிற்சிகள். ஒருவரால் எந்தளவுக்கு இயலுமோ, அந்தளவுக்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து எலும்புகளையும், இணைப்புகளையும் இயக்கிப் பயன்படுத்த வேண்டும். வேலையே செய்யாமல் வைத்திருந்தால், மூட்டுகள் பாதிக்கப்படும். அதேபோல, ஒருவர் தன் திறனுக்கும் அதிகமாக உழைக்கும்போதும் எலும்புகள் பாதிக்கப்படும் என்பதால் அதை தவிர்க்க வேண்டும்.
தினமும் உறங்கச் செல்லும்போது, இடுப்பு, கால், கழுத்து என எங்கேனும் வலி கண்டால், அன்று அந்தப் பகுதிக்குக் கொடுத்த கூடுதல் அழுத்தம் என்ன என்று யோசித்து, மறுநாள் அதை நிவர்த்தி செய்ய வேண்டும். ஒருவேளை பிரச்சினை தோன்றி மறையாமல் நீடித்தால், மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். எலும்பு, மூட்டு, கழுத்து உள்ளிட்ட வலிகளைச் சுமந்துகொண்டே இருக்கக் கூடாது. அது தீவிரமாக வாய்ப்புண்டாகலாம்’’ என்று எச்சரிக்கிறார்கள். Good Sitting Posture for Work