”நீங்கள் கடின உழைப்பாளியாக இருந்தாலும், வாழ்நாளில் பாதி நாட்கள் இருக்கையில் அமர்ந்து, உங்கள் ஆயுளைக் குறைத்துக்கொள்ளாதீர்கள்” என்று எச்சரிக்கிறார்கள் இதயம் தொடர்பான பிசியோதெரபிஸ்ட்ஸ்.
”அலுவலகத்தில் உட்கார்ந்த நிலையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்திருக்கிறது. குறைந்தது எட்டு மணி நேரம் சேரில் ஆணி அடித்ததுபோல் இடைவிடாது உட்கார்ந்து வேலை செய்கின்றனர். இப்படித் தினமும் எட்டு மணி நேரம் தொடர்ந்து, வாரக்கணக்கில் உட்கார்ந்திருக்கும்போது, தசைகளின் செயல்பாடுகள் குறைந்து, தசைகள் இறுக ஆரம்பிக்கும். அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்கு எலும்பு தொடர்பான பிரச்சினைகளும் ஏற்படும்.
அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க, தசைகள்தான் ‘பவர் ஹவுஸ்’ போன்று செயல்படுகிறது. அதில் பிரச்சினை ஏற்பட்டால் கலோரிகள் சரிவர எரிக்கப்படாது. சுறுசுறுப்பாக ஓடி ஆடும்போதும், உடற்பயிற்சி செய்யும்போதும் ஆக்சிஜன் அதிகம் உள்வாங்குவது இயல்பு. ஆனால், ஒரே இடத்தில் எந்தவித அசைவும் இன்றி இருந்தால், கலோரிகள் எரிக்கப்படுவது குறைந்துவிடும். இதனால் உடலில் குளுகோஸின் அளவில் மாற்றம் ஏற்படும். முடிவில் நீரிழிவு நோயில் (டைப் 2 டயாபடீஸில்) கொண்டு விடும்.
இதையும் கவனிக்காமல் அலட்சியமாக இருந்தால், பிரச்சினைகள் இன்னும் தீவிரமடையும். உடலில் ‘எல்.டி.எல்’ என்ற கெட்டக் கொழுப்பு அதிகரிக்கும். தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரம் என, தொடர்ந்து ஒரு வருஷம் வரை நாற்காலியில் உட்காரும்போது, ‘ஒபிசிட்டி’ என்ற உடல் பருமன் பிரச்சினை தலைத்தூக்கும்.
உட்கார்ந்த நிலையில், அலுவலகப் பணிகளை முடிக்க முடியாமல் போகும்போது, கூடவே மன அழுத்தம் ஏற்பட்டு, ‘கேட்டகோலமைன்’ என்ற ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். இதனால் இதய நோய் வரலாம். மேலும் தொடர்ந்து தவறான பொசிஷனில் உட்கார்ந்தால் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு, முதுகு வலி வரலாம். கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் இருப்பதால், ‘ரேடியேட்டிங் பெய்ன்’ (ராடிகலோபதி) என்ற பாதிப்பும் ஏற்படக்கூடும். மேலும், கால்களை தொங்கவிட்டபடி உட்கார்ந்திருக்கும்போது, காலில் வீக்கம், வலி, மறத்துப்போதல் போன்றவை ஏற்படலாம்” என்று எச்சரிப்பவர்கள் இதற்கு தீர்வாக சில டிப்ஸ் தருகின்றனர்.
ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து நின்று, சிறிது தூரம் நடக்க வேண்டும்.
உட்கார்ந்தபடியே கால்களுக்கு அசைவு கொடுப்பதுபோல், எளிய பயிற்சிகள் செய்யலாம்.
வீடு மற்றும் அலுவலகத்தில் லிஃப்ட்டில் போகாமல் படிகளைப் பயன்படுத்தலாம்.
கடைத்தெருவுக்கு டூவீலரில் போகாமல், காலார நடக்கலாம்.
அலுவலகத்துக்குள் இன்டர்னல் மெயில் அனுப்புவதற்கு பதில், சிறிய நடை நடந்து கேபினுக்குச் சென்று கைகுலுக்கலாம்.
பிரேக் நேரங்களில் டீ ஆர்டர் பண்ணாமல், பக்கத்தில் இருக்கும் கேன்டீனுக்கு நடந்து சென்று காபி அருந்தலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: லிப்ஸ்டிக்கே பயன்படுத்தாதவர்களின் வாயைச் சுற்றி அலர்ஜி… காரணம் என்ன?
டாப் 10 நியூஸ் : அதிமுக – ஆளுநர் சந்திப்பு முதல் இந்தியன் 2 டிரைலர் ரிலீஸ் வரை!
கிச்சன் கீர்த்தனா : கீரை கட்லெட்
ஹெல்த் டிப்ஸ்: பருப்பு சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை… தவிர்ப்பது எப்படி?