அதிரடியாய் உயர்ந்த தங்கம் விலை!

Published On:

| By Jegadeesh

தமிழகத்தில் தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில், இன்று( மார்ச் 4)அதிரடி உயர்வை கண்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை பிப்ரவரி பாதியில் குறைந்து வந்தது.

பிப்ரவரி மாத தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த தங்கம், மாத இறுதியில் ஒரு கிராம் ரூ. 5,201 என்ற விலையிலும் விற்பனை ஆனது. ஆனாலும் மீண்டும் விலை ஏற்றத்தில் சென்றது.

இந்த நிலையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11 அதிகரித்து இன்று (மார்ச் 4) 5,613 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 88 ரூபாய் வரை அதிகரித்து 44,904 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி கிராமுக்கு 70.00 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 70000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மு.வா.ஜெதீஸ் குமார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share