சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.720வரை குறைந்துள்ளது. தங்கம் விலை சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று (செப்டம்பர் 25) ஆபரண தங்கம் விலை ஒரு கிராம் ரூ.90 குறைந்து ரூ.10,510க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.720 குறைந்து ரூ.84,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று (செப்டம்பர் 25) வெள்ளியில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.150க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.15,00,00க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தங்கம் விலை
சென்னையில் நேற்று (செப்டம்பர் 24) ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.10,600க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.320 குறைந்து ரூ.84,800க்கு விற்பனையானது.
கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாளும் காலை மாலை என இரு வேளையும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ரூ.84,800 வரை உயர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.