ADVERTISEMENT

ஆட்டம் காட்டும் தங்கம்.. ஒரே நாளில் எவ்வளவு விலை உயர்வு பாருங்க!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold price increased today

பண்டிகை கால தேவை முகூர்த்த காலம், சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல காரணங்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 21) ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.2,080 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.260 உயர்ந்து ரூ.12,180க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.2,080 உயர்ந்து ரூ. 97,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.2 குறைந்து ரூ.188க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,88,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
20-10-202595,360
19-10-202596,000
18 -10-202596,000
17 -10-202597,600
16-10-202595,200
15-10-202594,880
14-10-202594,600
13-10-202592,640
12-10-202592,000
11- 10-202592,000
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share