சென்னையில் ஒரு சரவன் ஆபரணத்தங்கம் விலை இன்று (நவம்பர் 10) ஒரே நாளில் ரூ.880 வரை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தங்கம் விலை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த அக்டோபர் மாதம் ஒரு சவரன் ரூ.97,600 வரை உயர்ந்தது. தீபாவளிக்கு பின் சற்றே விலை குறைந்திருந்த நிலையில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.110 வரை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.2000 வரை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.110 வரை உயர்ந்து ரூ.11,410க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.880 வரை உயர்ந்து ரூ.91,280 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.167 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 2000 உயர்ந்து ரூ.1,67,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 9 -11-2025 | 90,400 |
| 8-11-2025 | 90,400 |
| 7 -11-2025 | 90,160 |
| 6 -11-2025 | 90,560 |
| 5 -11-2025 | 89,440 |
| 4 -11-2025 | 90,000 |
| 3 -11-2025 | 90,800 |
| 2 -11-2025 | 90,480 |
| 1 -11-2025 | 90,480 |
| 31 -10-2025 | 90,400 |
| 30 -10-2025 | 90,400 |
