ஜாக்பாட் மக்களே.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7600 சரிந்த தங்கம் விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் இன்று (மார்ச் 23) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7600 வரை சரிந்துள்ளது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில் இன்று மாலை ஒரு சவரன் தங்கம் ரூ. 2,240 வரை சரிந்துள்ளது.

ADVERTISEMENT
தற்போதைய தங்கம் விலை

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராம் ரூ.670 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.280 வரை குறைந்து ரூ.12,670க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை ஒரு சவரன் தங்கம் ரூ. 5,360க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் பிற்பகலில் ரூ.2,240 வரை குறைந்து ரூ. 1,01,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் இன்று காலை ஒரு கிராம் ரூ.560 குறைந்த நிலையல் பிற்பகலில் ரூ. 160 குறைந்து ரூ. 10,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
தற்போதைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 15 குறைந்து ரூ.235 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 15000 குறைந்து ரூ.2,35,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
22-3-20261,08,960
21-3-20261,08,960
20-3-20261,11,600
19-3-20261,11,200
18-3-20261,16,560
17-3-20261,17,200
16-3-20261,17,680
15-3-20261,18,080
14-3-20261,18,080
13-3-20261,19,200

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

22-3-2026250
21-3-2026250
20-3-2026260
19-3-2026265
18-3-2026275
17-3-2026280
16-3-2026276
15-3-2026280
14-3-2026280
13-3-2026290
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share