சென்னையில் இன்று (மார்ச் 23) காலை மற்றும் பிற்பகல் என இரண்டு முறை சவரனுக்கு ரூ. 7,600 வரை சரிந்த 22 கேரட் ஆபரணத்தங்கம் மாலையில் ரூ. 5,360 உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, போர் பதற்றம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று மாலை ஒரு சவரன் தங்கம் ரூ. 5,360 வரை உயர்ந்துள்ளது.
தற்போதைய தங்கம் விலை
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராம் ரூ.670 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.280 வரை குறைந்து ரூ.12,670க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று காலை ஒரு சவரன் தங்கம் ரூ. 5,360க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் பிற்பகலில் ரூ.2,240 வரை குறைந்து ரூ. 1,01,360க்கு விற்பனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று மாலை மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 670 உயர்ந்து ரூ.13,340க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 5,360 உயர்ந்து ரூ.1,06,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் தங்கம் இன்று காலை ஒரு கிராம் ரூ.560 குறைந்த நிலையல் பிற்பகலில் ரூ. 160 குறைந்து ரூ. 10,640க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மாலை மீண்டும் ரூ. 490 உயர்ந்து ரூ.11,130க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ. 15 குறைந்து ரூ.235 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மாலையில் மீண்டும் ரூ.15 உயர்ந்து ரூ. 250க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 15,000 உயர்ந்து ரூ.2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 22-3-2026 | 1,08,960 |
| 21-3-2026 | 1,08,960 |
| 20-3-2026 | 1,11,600 |
| 19-3-2026 | 1,11,200 |
| 18-3-2026 | 1,16,560 |
| 17-3-2026 | 1,17,200 |
| 16-3-2026 | 1,17,680 |
| 15-3-2026 | 1,18,080 |
| 14-3-2026 | 1,18,080 |
| 13-3-2026 | 1,19,200 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 22-3-2026 | 250 |
| 21-3-2026 | 250 |
| 20-3-2026 | 260 |
| 19-3-2026 | 265 |
| 18-3-2026 | 275 |
| 17-3-2026 | 280 |
| 16-3-2026 | 276 |
| 15-3-2026 | 280 |
| 14-3-2026 | 280 |
| 13-3-2026 | 290 |
