சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 வரை குறைந்துள்ளது.
தொடர்ச்சியாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது ஓரளவு விலை குறைந்து வருவது நடுத்தர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் மேலும் மேலும் தங்கம் விலை குறைந்து வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 24) மாலை ஒரு கிராம் ரு.140 குறைந்து ரூ. 11,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,120 குறைந்து ரூ.91,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் இன்று காலை ரூ.40 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.140 குறைந்துள்ளது.
தற்போதைய வெள்ளி விலை
சென்னையில் இன்று மாலை ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 குறைந்து 170க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.3 குறைந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.1 குறைந்துள்ளது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 23-10-2025 | 92,000 |
| 22-10-2025 | 92,320 |
| 21-10-2025 | 96,000 |
| 20-10-2025 | 95,360 |
| 19-10-2025 | 96,000 |
| 18 -10-2025 | 96,000 |
| 17 -10-2025 | 97,600 |
| 16-10-2025 | 95,200 |
| 15-10-2025 | 94,880 |
| 14-10-2025 | 94,600 |
