ADVERTISEMENT

மேட்டூர் அணையில் நீர் வெளியேற்றம்…. 65000 கன அடியாக அதிகரிப்பு!

Published On:

| By Pandeeswari Gurusamy

Water release increases in Mettur Dam

மேட்டூர் அணைக்கு தொடர்ச்சியாக நீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில் நீர் திறப்பு 65000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேசமயம் காவிரியின் துணை நதிகளாக பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

வியாழக்கிழமை மாலை மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 45,000 கனஅடி வீதம் வெளியேற்றப்பட்ட நிலையில், நள்ளிரவு முதல் வினாடிக்கு 55,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், மேட்டூர் அணையின் முழு கொள்ளளவிற்கு நீர் உள்ளதாலும், அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் இன்று (அக்டோபர் 24) வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணி முதல் 55,000 கன அடியிலிருந்து 65,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share