திமுகவில் இணைந்தார் விசிக முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு

Published On:

| By Mathi

VCK Panaiyur Babu DMK

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் (VCK) இருந்து விலகுவதாக அறிவித்த அக்கட்சியின் முன்னாள் துணை பொதுச்செயலாளரும் செய்யூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பனையூர் பாபு (Panaiyur Babu) இன்று முன்னாள் முதல்வரும் திமுக (DMK) தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

2021-ம் ஆண்டு செய்யூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பனையூர் பாபு. அண்மையில் விசிகவில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தமது ஆதரவாளர்களுடம் இணைந்தார் பனையூர் பாபு.

ADVERTISEMENT

இந்நிகழ்வில் திமுக மூத்த தலைவர்கள் டிஆர் பாலு, எ.வ.வேலு, கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share