மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷா மாநிலங்களில் குர்மி மக்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி நடைபெற்று வரும் காலவரையற்ற போராட்டத்தால் 55 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று (செப்டம்பர் 21) ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேற்கு வங்கம், ஒடிஷா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் குர்மி மக்கள் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல ரயில் நிலையங்களை முற்றுகையிட்டு ரயில் சேவைகளையும் குர்மி மக்கள் முடக்கினர்.
இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு ரயில்வே, கிழக்கு ரயில்வ்வே மற்றும் கிழக்கு மத்திய ரயில்வே நிர்வாகங்கள் 55 ரயில் சேவைகளை இன்று ரத்து செய்துள்ளன.
தன்பாத்- கோவை இடையேயான எக்ஸ்பிரஸ் (03679); தன்பாத்- ஆழப்புழா இடையேயான எக்ஸ்பிரஸ் (13351) ஆகியவை நேற்று ( செப்டம்பர் 20) முழுமையாக ரத்து செய்யப்பட்டன. பல வந்தே பாரத் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கிழக்கு கடற்கரையோர மாநிலங்களில் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குர்மிகள் போராட்டம் ஏன்?
குர்மி இன மக்கள் 2 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குர்மி இன மக்களுக்கு பழங்குடிகள் அந்தஸ்து வழங்க வேண்டும்; தங்களது குர்மாலி மொழியை அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பத்உ அம்மக்களின் கோரிக்கைகள். இதற்காகவே போராட்டங்க்கள் நடத்தப்படுகின்றன.