வார இறுதி நாளிலும் உச்சத்தில் தங்கம் விலை… அப்போ தீபாவளி திண்டாட்டமா?

By christopher

|

Published on 20 Sep 2025, 11:02 AM

gold price today create burden on gold lovers

சென்னையில் தங்கம் விலை இன்று (செப்டம்பர் 20) சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ரூ.82,320 ஆக புதிய உச்சம் தொட்டுள்ளது.

ஆபரணத்தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதன்படி சென்னையில் இன்று காலையில் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 60 உயர்ந்து ரூ.10,290க்கும், ஒரு சவரன் ரூபாய் 480 உயர்ந்து, ரூ.82,320க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

அதே போன்று 24 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 66 உயர்ந்து ரூ.11,226க்கும், ஒரு சவரன் ரூபாய் 528 உயர்ந்து, ரூ.89,808க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையானது இன்று ஒரு கிராமுக்கு ரூ.2 உயர்ந்து 145க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 2000 உயர்ந்து ரூ.1,45,000க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

கடந்த 6 ஆம் தேதி முதன்முறையாக ஒரு சவரன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை கடந்த நிலையில், அடுத்த 15 நாட்களில் 2300 ரூபாய் உயர்ந்துள்ளது.

இன்னும் ஒரு மாதத்தில் தீபாவளி வர உள்ள நிலையில், இந்தாண்டு தங்க நகை வாங்க வேண்டும் என்பது கனவாகிவிடுமோ என பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

christopher

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel