இறுதி வாக்காளர் பட்டியல்.. உங்களுக்கு ஓட்டு உரிமை உள்ளதா? எப்படி தெரிந்து கொள்வது?

Published On:

| By Mathi

Election Commission Voters List

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் மற்றும் விவரங்களை சரி பார்க்க என்ன செய்ய வேண்டும்?

ADVERTISEMENT
  • நிர்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடிக அமைவிடங்களில்..
  • சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்களில்..
  • தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளம் http://elections.tn.gov.in/
  • https://voters.eci.gov.in/
  • https://electoralsearch.eci.gov.in/

ஆகியவற்றில் உங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களை சரி பார்க்கலாம்.

27.10.2025 தேதியின் நிலவரப்படி, 6,41,14,587 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். சிறப்பு தீவிர திருத்தம், 2026-இன் கீழ் கணக்கெடுப்பு கட்டம் முடிந்த பிறகு, மொத்தம் 5,43,76,756 வாக்காளர்களின் பெயர்களைக் கொண்ட வரைவு பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, 19.12.2025 முதல் 30.01.2026 வரையிலான ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகளுக்கான காலத்தில், 27.53 லட்சம் தகுதியுள்ள வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர், மேலும் 4.23 லட்சம் தகுதிபெறாத நபர்கள் நீக்கப்பட்டனர். அதன்படி, தகுதியுள்ள வாக்காளர்களைக் கொண்டு 2026-இன் இறுதி வாக்காளர் பட்டியல் 23.02.2026 அன்று வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

23.02.2026 நிலவரப்படி

  • வாக்காளர்களின் எண்ணிக்கை 5,67,07,380 (ஆண்: 2,77,38,925; பெண்: 2,89,60,838; மூன்றாம் பாலினம்: 7,617;) ஆகும்.
  • இதில் 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம்
  • மாற்றுத்திறனாளிகள் எனக் குறிக்கப்பட்ட வாக்காளர்கள் 4.63 லட்சம் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் (85+) 3.99 லட்சம்.
  • இறுதி வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 27-சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 5,36,991 வாக்காளர்கள் உள்ளனர் (ஆண்கள் 2,62,621 ; பெண்கள் 2,74,254 ; மூன்றாம் பாலினத்தவர் 116). இதற்கு அடுத்தப்படியாக திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட 6-ஆவடி சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,28,772 வாக்காளர்கள் உள்ளனர் (ஆண்கள் 2,09,662 ; பெண்கள் 2,19,035; மூன்றாம் பாலினத்தவர் 75).
  • தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 18-துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்தம் வாக்காளர்கள் 1,16,896 ஆவர் (ஆண்கள் 58,221; பெண்கள் 58,620; மூன்றாம் பாலினத்தவர் 55). இதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16-எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,34,879 ஆவர் (ஆண்கள் 65,677 ; பெண்கள் 69,149 ; மூன்றாம் பாலினத்தவர் 53).
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share