விஜய் ரோடு ஷோ… நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு!

Published On:

| By Selvam

Vijay road show police

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை வரவேற்க நேற்று (ஏப்ரல் 26) கோவை விமான நிலையம் வந்த தொண்டர்கள், அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. Vijay road show police

கோவை எஸ்.என்.எஸ் கல்லூரியில் தவெக பூத் கமிட்டிக் கூட்டம் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் நேற்று கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவரை வரவேற்க, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையம் முன்பாக குவிந்தனர்.

மேலும், விஜய்யை வரவேற்க 50 நிர்வாகிகள் மட்டுமே விமான நிலையத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிகளவில் தொண்டர்கள் சென்றதால், அங்கிருந்த டிராலிகள், சேர்கள், தடுப்புகள் போன்றவை சேதமடைந்தன.

மேலும், விமான நிலையத்தில் இருந்து அவினாசி சாலை வரை விஜய் ரோடு ஷோ சென்றார். அவரை பின்தொடர்ந்து தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்தநிலையில், விமான நிலையத்தில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கோவை தவெக மாவட்ட செயலாளர் சம்பத் குமார் உள்ளிட்டோர் மீது பீளமேடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை இயக்கியதாக 113 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Vijay road show police

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share