ஒரு காலத்தில் வீட்டிலேயே இருப்பவர்களை அதிசயமாகப் பார்ப்பார்கள். ஆனால், இப்போது வெளியில் எங்காவது சென்று வருபவர்களையே ஆச்சர்யமாகப் பார்க்க வேண்டியதிருக்கிறது. எந்த வேலையையும் செய்யாமல் சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் எனத் தெரியுமா என வடிவேலு கேட்டபோது சிரிப்பாக இருந்தது. ஆனால், வீட்டுக்குள் அடங்கியிருக்கும் இந்த நேரத்தில் வடிவேலு சொன்னதில் இருக்கும் உண்மை புரிகிறது. அப்படி உண்மை புரியும்போது, இதை அடிப்படையாக வைத்து நாம் யாரைக் காயப்படுத்தினோமோ அவர்களது ஞாபகம் வரும் அல்லவா? அப்படி பலருக்கும் நினைவுக்கு வந்தவர்தான் சிம்பு.
ஷூட்டிங்குக்கும் செல்வதில்லை. வேறு எந்த ஆக்டிவிட்டியும் இல்லாமல் இருக்கிறார் என்று சிம்புவின் மீது பல காலமாக ஒரு விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அந்த விமர்சனத்தை உடைக்கும் விதமாக, மாநாடு படத்தில் நடிக்கத் தொடங்கினார் சிம்பு. ஷூட்டிங் தொடங்கி சில மாதங்களிலேயே இந்தியா மட்டுமல்லாமல் உலகமே முடங்கிவிட்டது. எனவே, இப்போது சிம்புவும் மற்றவர்களைப் போலவே வீட்டில் இருக்கிறார். இந்த நேரத்தில் இத்தனை நாளும் சிம்புவைக் கிண்டல் செய்ததற்காக வருத்தப்பட்டு சிம்புவிடம் மீம்ஸ் மூலம் பலரும் மன்னிப்பு கேட்டனர். ஆனால், அதிலும் ஒரு நையாண்டி இருந்தது. இவற்றையெல்லாம் சிம்பு ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எல்லாவற்றையும்விட அனைவருக்கும் முக்கிய பிரச்சினையாக இருந்தது, சிம்புவின் உடல் பராமரிப்பு. பல காலமாக ஷூட்டிங்குக்குச் செல்லாமல் உடல் பருத்துக் காணப்பட்ட சிம்பு, மாநாடு படத்துக்காக கடினமான உடற்பயிற்சியை மேற்கொண்டார். தற்போது ஷூட்டிங் நின்றுவிட்டதால், உடற்பயிற்சி மேற்கொள்வது கடினமான ஒன்றாக இருக்கும். எனவே, இந்த நிலையிலும் வீட்டுக்குள்ளேயே ஜாக்கிங், பாக்சிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகளைச் செய்யுமாறு சிம்புவுக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிம்பு, அவரது வீட்டைச் சுற்றி இருக்கும் இடத்தில் ஜாக்கிங் சென்று அதை வீடியோவாக எடுத்து அவரது மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு அவர்களின் மூலமாக வெளியிட்டிருக்கிறார்.
#SilambarasanTR working out at home Because of lot of requests from the fans! #StayHomeStaySafe #WorkoutsAtHome pic.twitter.com/MGJnI0S3F4
— Diamond Babu (@idiamondbabu) April 13, 2020
**-சிவா**,”









