வேத காலத்தில் தவளை, எறும்பை வைத்து, எப்படி மழை பெய்வதை கணித்தார்கள் என்பதை ஆய்வு செய்ய உதவித் தொகையை அறிவித்துள்ளது தேசிய சமஸ்கிருத பல்கலைக் கழகம் (National Sanskrit University) தெரிவித்துள்ளது.
தேசிய சமஸ்கிருத பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிவிக்கையில், “வேத காலத்தில் எறும்பு, தவளைகளை வைத்து எப்படி மழை பெய்ததை கணித்தார்கள் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வில் ஈடுபடும் ஆய்வாளர்களுக்கு மாதம் ரூ.10,000 வழங்கப்படும். இதற்காக விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை ஏற்று சுமார் 600-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தும் இருக்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.
இந்த ஆய்வில் கொல்கத்தா NIT-ம் இணைந்துள்ளதாம். இந்த ஆராய்ச்சி மொத்தம் 6 மாத காலமாகும்.
தேசிய சமஸ்கிருத பல்கலைக் கழகத்தின் இந்த நடவடிக்கை கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.