கோவை வரும் பிரதமர்.. எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன் சந்திப்பு

By Pandeeswari Gurusamy

|

Published on 18 Nov 2025, 12:44 PM

EPS, G.K. Vasan to meet Modi in Coimbatore

கோவை வரும் பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி பழனிசாமி, ஜி.கே வாசன் உள்ளிட்டோர் சந்திக்க உள்ளதாக தவல்கள் வெளியாகி உள்ளது.

கோவையில் நானை தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும் அதற்கான தொழில் நுட்பம் மற்றம் கொள்கைகளை வகுக்க வலியுறுத்தியும் நாளை (நவம்பர் 17) கொடிசியா மைதானத்தில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று விழாவை தொடங்கி வைக்க உள்ளார்.

ADVERTISEMENT

நாளை பிற்பகல் 1.30 மணியளவில் விமானம் மூலம் கோவை வரும் பிரதமருக்கு சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பின்னர் கார் மூலம் கொடிசியா செல்லும் பிரதமர் மாநாட்டில் பங்கேற்கிறார். அங்கு தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களை சேர்ந்த இயற்கை விஞ்ஞானிகளுடன் கலந்துரையாட உள்ளார். பின்னர் பிற்பகல் 3.15 மணியளவில் கோவை விமான நிலையம் செல்லும் பிரதமர் விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்

பிரதமர் வருகையையொட்டி கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு சிங்காநல்லூர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, சின்னியம்பாளையம், நேரு நகர், காளப்பட்டி, கொடிசியா உள் அரங்கம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் தற்காலிகமாக ‘ரெட் ஜோன்’ பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் இன்று முதல் நாளை இரவு 7 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விமான நிலையத்திற்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் வெளிப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்களை அப்புறப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை வரும் பிரதமரை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் சந்தித்து பேச உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel