சென்னை நீலாங்கரையில் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஜூலை 9-ந் தேதி சோதனை நடத்தினர். Enforcement Directorate Actress Aruna
பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தின் நாயகியாக நடித்தவர் அருணா. 1980களில் முக்கியமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர். பின்னர் தொழிலதிபர் மோகன் குப்தாவை திருமணம் செய்து கொண்டார்.
வீடுகளின் உள் அலங்கார கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை அருணாவின் கணவர் மோகன் குப்தா நடத்தி வருகிறார். இந்த நிலையில் நீலாங்கரையில் உள்ள அருணாவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஜூலை 9-ந் தேதி சோதனை மேற்கொண்டனர். அருணா வீட்டில் 6 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது.