கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக திமுக புள்ளிகள், மணல்குவாரி தொடர்புடைய இடங்கள், கட்டுமான நிறுவனங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வந்தது.
இந்தநிலையில், சென்னையில் இன்று ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டுமானம் மற்றும் ரசாயன நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த நவீன் பில்டர்ஸ் உரிமையாளர் நவீன் (எ) விஸ்வஜித் வீடு, கோட்டூர்புரம் விஷ்ணு, அண்ணாநகர் சுப்பிரமணியம் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது அரசியல் அரங்கில் மிக முக்கியமான விவாத பொருளாக மாறியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தருமபுரம் ஆதீனம் வழக்கு: அதிமுக நிர்வாகி தலைமறைவு!
நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து; கூடுதல் பேருந்து, மெட்ரோ ரயில் விவரங்கள் உள்ளே!