நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து; கூடுதல் பேருந்து, மெட்ரோ ரயில் விவரங்கள் உள்ளே!
தொடர்ந்து நான்காவது வாரமாக, நாளை (மார்ச் 3) 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”நாளை (மார்ச் 3) ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை கடற்கரை- தாம்பரம், தாம்பரம் – சென்னை கடற்கரை, சென்னை-கடற்கரை அரக்கோணம் ரயில்கள், காஞ்சிபுரம் – சென்னை கடற்கரை ரயில்கள், திருமால்பூர் – சென்னை கடற்கரை ரயில்கள் இடையே இயக்கப்பட்டு வந்த 44 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுகின்றன.
மேலும் நாளை ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை கடற்கரையிலிருந்து காலை 10.30 மணி முதல் மாலை 2.30 மணிவரை தாம்பரத்திற்கு இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும்.
அதே போல் சென்னை, தாம்பரத்திலிருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரைக்கு இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில்களும் நாளை ரத்து செய்யப்படும்,” என தெரிவித்துள்ளது.
பெரும்பாலான சென்னைவாசிகள் மின்சார ரயில்களை நம்பியுள்ள நிலையில், அதற்கான மாற்று ஏற்பாடாக நாளை மட்டும் 7 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என, மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.
இதேபோல பயணிகளின் வசதிக்காக தாம்பரம் முதல் சென்னை கடற்கரை இடையே கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என, சென்னை பெருநகர மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, பிராட்வே-தாம்பரம் வழித்தடத்தில் 60 கூடுதல் பேருந்துகளும், பிராட்வே வழி திநகர், எழும்பூர்-தாம்பரம் வரை 20 கூடுதல் பேருந்துகளும், கிண்டி- கிளாம்பாக்கத்திற்கு 10 கூடுதல் பேருந்துகளும், கொருக்குப்பேட்டை-தாம்பரத்திற்கு 30 கூடுதல் பேருந்துகளும், பிராட்வே- கூடுவாஞ்சேரிக்கு 20 கூடுதல் பேருந்துகளும், தியாகராய நகர்-கூடுவாஞ்சேரி வரை 10 கூடுதல் பேருந்துகளும் மொத்தமாக 150 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-மாணவ நிருபர் கவின்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக தொகுதி பங்கீட்டு குழுவிடம் வேல்முருகன் வைத்த இரண்டு டிமாண்ட்!
ஜோஷ்வா இமை போல் காக்க – விமர்சனம்!