வேட்பு மனு தாக்கல் : தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Kavi

வேட்பு மனு தாக்கல் செய்ய 8 நாள் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் அதில் 4 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. இதனால் 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். 

வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு  கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குதல், பிரச்சாரத்தில் ஈடுபடுதல், தேர்தல் அறிக்கை தயாரித்தல் என அரசியல் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

ADVERTISEMENT

இந்தசூழலில் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 25) முக்கிய அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது.  

அதில்,  “2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடும் நாள் 30.03.2026 (திங்கட்கிழமை) முதல் 06.04.2026 (திங்கட்கிழமை) வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 1881ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின்கீழ், பொது விடுமுறையாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 31.03.2026 (செவ்வாய்க்கிழமை). 01.04.2026 (புதன்கிழமை). 03.04.2026 (வெள்ளிக்கிழமை) மற்றும் 05.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் 06.04.2026 (திங்கட்கிழமை) ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ஏப்ரல் 2 -மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 3- புனித வெள்ளி, ஏப்ரல் 4 சனிக்கிழமை, ஏப்ரல் 5 ஞாயிறு கிழமை என தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share