தேர்தல் ஆணையம் பாஜகவின் விருப்பப்படி செயல்படுகிறது என்பதை பி.எல்.சந்தோஷ் நிரூபித்துள்ளார் என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு வந்துள்ள பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் இன்று (பிப்ரவரி 9) கமலாலயத்தில் தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் மையக்குழு உறுப்பினர்களுடன் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தினார்.
அப்போது ஏப்ரல் முதல் வாரத்தில், முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற வாய்ப்புகள் அதிகம். இன்னும் 65 நாட்களில் தேர்தல் வரவிருப்பதால் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தகவல்கள் வருகின்றன.
இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், “மீண்டும் தேர்தல் ஆணையம் பாஜகவின் கையில் என்று நிருப்பித்த பி.எல்.சந்தோஷுக்கு நன்றி.
இதை தான் நாங்களும் சொல்கிறோம்.தேர்தல் ஆணையம் பாஜகவின் விருப்பப்படி செயல்படுகிறது” என்று விமர்சித்துள்ளார்.
