“நான் எடுக்கும் முடிவுதான்” : அமித் ஷாவின் பேச்சுக்கு எடப்பாடி பதில்!

Published On:

| By Kavi

. Edappadi response to Amit Shah speech

கூட்டணி ஆட்சி தொடர்பான உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு, “நான் எடுக்கும் முடிவுதான்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். Edappadi response to Amit Shah speech

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தகைகள் அரசியல் கட்சிகளுக்கிடையே நடந்து வருகின்றன.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம்… தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் கடலூர் சிதம்பரம் சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

கேள்வி- பதில்

அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று தொடர்ந்து சொல்கிறாரே?

கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை… எங்களுடைய கூட்டணி ஆட்சியமைக்கும் என்றுதான் சொல்கிறார். இந்த கூட்டணிக்கு தலைமை யார் நாங்கள்தானே…நான் எடுக்கும் முடிவுதான். அதிமுதான் ஆட்சியமைக்கும்… இதில் என்ன தெளிவுப்படுத்த வேண்டும். கூட்டணியில் விரிசல் ஏற்படுத்த முயல வேண்டாம். ஒன்றும் செய்ய முடியாது.

பாமக உங்கள் கூட்டணிக்கு வந்தால் மந்திரி சபையில் இடம் கேட்போம் என்று சொல்கிறார்களே?

வந்தால் பார்த்துக்கொள்ளலாம்… விடுங்கள்.

அதிமுக அழைத்தால் எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் இணைய தயார் என்று ஓபிஎஸ் சொல்கிறாரே?

காலம் கடந்துவிட்டது

பாமகவில் தந்தை மகன் என இரண்டு பிரிவாக இருக்கிறார்களே?

உட்கட்சி பிரச்சினையில் நாங்கள் எப்படி தலையிட முடியும் என்றார்.

தமிழ்நாட்டில் அதிமுக அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பாஜக நிச்சயம் இடம்பெறும், அதாவது கூட்டணி ஆட்சி என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து கூறி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இவ்வாறு பேட்டியளித்துள்ளார். Edappadi response to Amit Shah speech

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share