தமிழக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 23) இரவு சென்னையில் உள்ள தனது பசுமை வழிச் சாலை வீட்டில், அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு விருந்து அளிக்கிறார். edappadi palanisamy party admk mlas Kashmir attack
சட்டமன்றக் கூட்டத் தொடர் நிறைவுற இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விருந்து அளித்துள்ளார். இதில் அறுசுவை அயிட்டங்களும், அசைவ அயிட்டங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரிடம் பிடித்தமான உணவு எது என்று கேட்டு எடப்பாடி இந்த விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார் என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்..
இந்நிலையில், காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலால் தேசமே அழுதுகொண்டிருக்கும் நிலையில் பொறுப்பான பதவியில் இருக்கும் எடப்பாடி இப்படி விருந்துண்டு மகிழலாமா என்ற சர்ச்சைக் கேள்விகளும் எழுந்துள்ளன.
இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவு அதிமுக பிரமுகரான மருது அழகுராஜ்,
“தேசத்தையே கண்ணீரில் மூழ்க வைத்த கதறல் ஒலி உலகையே உலுக்கியுள்ள நாளில்… ஏற்கனவே முதலமைச்சராக இருந்தவர் இன்று எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் தேசியக்கொடி கட்டிய காரில் பயணிப்பவர் எடப்பாடி தனது விருந்து கொண்டாட்டத்தை தவிர்த்திருக்க வேண்டும் . குறைந்த பட்சம் அதனை தள்ளிவைத்திருக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் எடப்பாடி விருந்து மட்டும் கொடுக்கவில்லை… பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், அதை ஏற்றுக் கொள்வதற்காக விருந்துடன் பல்வேறு கவனிப்புகளும் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கும், முக்கிய நிர்வாகிகளுக்கும் நடைபெறுகிறது என்கிறார்கள் அதிமுகவிலேயே சிலர். edappadi palanisamy party admk mlas Kashmir attack
