அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை இன்று (ஆகஸ்ட் 16) சோதனை நடத்தி வருகிறது. இதனையடுத்து தலைமை செயலகத்தில் அவரது அறைக்கு செல்லும் நுழைவாயிலுக்கு பூட்டு போடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய சென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, சென்னையில் அபிராமபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் ரோஜா இல்லத்தில் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு CRPF உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வீட்டிற்க்கு பூட்டு போட்டிருந்த நிலையில் அதனை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சேப்பாக்கம்எம்எல்ஏ விடுதியில் அவரது மகன் ஐ.பி. செந்தில்குமார் அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தலைமைச் செயலகத்திலும் சோதனை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமைச்செயலகத்துக்கு வரும் வாகனங்கள் போலீசாரின் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் அங்கு அமைச்சர் ஐ.பெரியசாமி அறைக்குச் செல்லும் நுழைவு வாயிலுக்கு
தலைமைச் செயலக ஊழியர்கள் பூட்டு போட்டுள்ளனர்.