இந்தியா முன்னேறும்: ஜேட்லி நம்பிக்கை!

By Balaji

|

Published on 13 Jul 2018, 12:00 AM

அடுத்த ஆண்டில் உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்று அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘காங்கிரஸ் வெறும் கோஷங்களைத்தான் கிராமப்புற மக்களுக்கு வழங்கியது. பிரதமர் மோடி அவர்களுக்கு ஆதாரங்களை வழங்கியுள்ளார்’ என்ற தலைப்பில் அருண் ஜேட்லி தனது முகநூலில் நீண்ட பதிவு ஒன்றை ஜூலை 13ஆம் தேதி பதிவிட்டுள்ளார். அதில் இன்னும் ஒரு ஆண்டில் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவாகுமென்று அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அப்பதிவில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரமும், வர்த்தகப் போர்களும் நம் முன்னேற்றத்திற்குச் சவாலாக உள்ளன. இருப்பினும் நம்முடைய பொருளாதார வளர்ச்சியை இதே நிலையில் பாதுகாத்து வந்தால் இங்கிலாந்தைப் பின்னுக்குத்தள்ளி இந்தியா ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

உலக வங்கி அண்மையில் உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களுக்கான பட்டியலை வெளியிட்டது. அதில் இந்தியா 6ஆவது இடத்துக்கு முன்னேறியிருந்தது. அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும், ஜெர்மனி நான்காவது இடத்திலும், இங்கிலாந்து ஐந்தாவது இடத்திலும் உள்ளன. ஏழாவது இடத்தில் ஃபிரான்ஸ் உள்ளது.

“அண்மைக் காலமாகத் தொழில் தொடங்கும் அம்சங்களை இந்தியா எளிமையாக்கியுள்ளது. இதனால் பொருளாதாரம் மேலும் வளரும்” எனவும் அருண் ஜேட்லி தனது பதிவில் கூறியுள்ளார். 2017ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) 2.597 லட்சம் கோடி டாலர்களாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இந்தியா 7 முதல் 7.5 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.,”

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel