டாம்க்ரூஸ் The Smashing Machine Trailer 2025
ஹாலிவுட்டில் தற்போதிருக்கும் ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவர் ட்வெய்ன் ஜான்சன். டபிள்யூ டபிள்யூ எஃப் ரசிகர்களைப் பொறுத்தவரை, இவர் என்றும் ‘தி ராக்’. அப்படிப்பட்டவர் அந்த விளையாட்டின் வழியே கிடைத்த புகழைக் கொண்டு ஆங்கிலத் திரைப்படங்களில் நடித்தார். இன்று முன்னணி நட்சத்திர நடிகராக விளங்குகிறார். தற்போது இவரது வயது 52.
’தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ படத்தில் ‘தி ஸ்கார்பியன் கிங்’ ஆகத் தோன்றிய ட்வெய்ன் ஜான்சன், பின்னர் ‘வாக்கிங் டால்’, ‘டூம்’, ‘கிரிடிரான் கேங்’, ‘தி கேம் பிளான்’, ‘கெட் ஸ்மார்ட்’, ’ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 6’, ‘’சான் ஆண்ட்ரியாஸ்’, ’பேவாட்ச்’, ’ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல்’ மற்றும் ‘மோனா 1 & 2’ அனிமேஷன் படங்கள் வழியாக நம் மனதைக் கொள்ளையடித்தார்.

‘தி ராக்’ நடிக்கும் படங்கள் என்றால் ஆக்ஷன் காட்சிகள் பட்டாசாக இருக்கும் என்பது நம்மூர் ஆக்ஷன் விரும்பிகளின் நம்பிக்கை. அதற்கேற்ப அவரது படங்களும் இருந்து வருகின்றன.
இந்த நிலையிலேயே, தனது தோற்றத்தை மேக்கப் மூலமாக மாற்றிக்கொண்டு வாழ்க்கை வரலாற்றுப் படமொன்றில் நடிக்கிற முயற்சியில் இறங்கினார். அந்த படத்தின் பெயர் ‘தி ஸ்மாஷிங் மெஷின்’. The Smashing Machine Trailer 2025
அமெரிக்காவைச் சேர்ந்த மல்யுத்த மற்றும் தற்காப்புக்கலை வீரர் ‘மார்க் கெர்’ வாழ்வனுபவங்களைத் தழுவியது இப்படம். மல்யுத்த போட்டி நடக்கும் மேடையில் அவர் நிகழ்த்திய சாதனைகள், தழுவிய தோல்விகள் என்று அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கப் போகிறது இப்படம்.
பல்லாண்டு காலமாக டபிள்யூ டபிள்யூ எஃப் போட்டிகளை ரசிக்கிறவர்களுக்கு இது ஒரு ‘நாஸ்டால்ஜியா’ திரைப்படமாக அமையலாம்.
இந்த படத்திற்காக ட்வெய்ன் ஜான்சன் எவ்வளவு மெனக்கெட்டார்? அதற்கான பதிலாக, அவர் பூசிக்கொண்ட ‘ப்ராஸ்தடிக் மேக்கப்’ பற்றிய செய்முறை காணொலிகள் இனி வலைதளங்களில் உலவக்கூடும். The Smashing Machine Trailer 2025
பென்னி சாப்டி எழுதி இயக்கியிருக்கிற இப்படத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இணைந்திருக்கிறார் ட்வெய்ன் ஜான்சன்.

இதுவரை காமெடி, த்ரில்லர், பேண்டஸி, அட்வெஞ்சர் வகைமை படங்களில் நடித்தபோதும், முழுக்க ‘ட்ராமா’ வகைமையில் ட்வெய்ன் ஜான்சன் நடித்திருக்கிறாரா என்று தெரியவில்லை. அந்த வகையில் இது அவருக்கு ஒரு பரீட்சார்த்த முயற்சி. ரசிகர்களான நமக்கும்தான். அதனாலேயே, தற்போது வெளியாகியிருக்கிற ‘தி ஸ்மாஷிங் மெஷின்’ ட்ரெய்லர் அவரது ரசிகர்களால் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் இப்படம் வரும் அக்டோபர் 3 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே நாளில் இந்தியா உட்பட இதர நாடுகளிலும் கூட வெளியாகலாம். அவருக்கு இங்கும் ஒரு ரசிக கூட்டம் இருக்கிறது என்பதனால் அதுவே நிகழும்.
‘தி ஸ்மாஷிங் மெஷின்’ பட வசூல் விவரங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அதைத் தாண்டி, ட்வெய்ன் ஜான்சன் ரசிகர்களில் கணிசமானோருக்கு இப்படம் ஆச்சர்யம் தரும் என்கிற உத்தரவாதத்தைத் தருகிறது ட்ரெய்லர். படமும் அதே அனுபவத்தைத் தந்தால் நல்லது.
’ஒரு ஆக்ஷன் ஸ்டார் தனக்கான ஆக்டிங் சேலஞ்சை எப்படி சமாளிச்சார்ங்கறதும் நகம் கடிக்க வைக்குற அனுபவம் தானே’ என்று ட்வெய்ன் ஜான்சன் ரசிகர்கள் நிச்சயம் கருதுவார்கள். ‘தி ஸ்மாஷிங் மெஷின்’ என்ற டைட்டிலே அதற்கேற்ற விறுவிறுப்பான ஆக்ஷன் எபிசோடையும் கண்டிப்பாக வழங்கும்..! The Smashing Machine Trailer 2025
