காய்ச்சல் சமயத்தில் என்ன உணவுகளை சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது?

Published On:

| By Santhosh Raj Saravanan

during fever time what foods to eat and not to eat health tips

காய்ச்சல் சமயத்தில் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும், எவற்றை சாப்பிடக்கூடாது என்பது குறித்துப் பார்க்கலாம்.

நமது உடலில் வைரஸ், பாக்டீரியா தொற்றுகள் ஏற்படும்போது இயற்கையாகவே காய்ச்சல் வந்துவிடுகிறது.  இதுதவிர வழக்கமாக சாதாரண காய்ச்சல்களும் (Fever) ஏற்படுகின்றன.  அதாவது, உடலின் வெப்பநிலை அதிகரிப்பதன் மூலம் அது தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது. காய்ச்சல் காரணமாக மக்கள் உடல் பலவீனம், பசியின்மை, உடல் வலி போன்றவற்றை எதிர்கொள்கிறார்கள். இந்த சமயத்தில் எதாவது சாப்பிட்டாலும் கூட வாந்தி, குமட்டல் உணர்வுகள் ஏற்படும். மேலும், தவறான உணவுகளை எடுத்துக்கொள்வது காய்ச்சலை அதிகரிக்கச் செய்யலாம்.

ADVERTISEMENT

காய்ச்சலின் போது என்ன உணவுகளை சாப்பிடலாம் (What foods can you eat during a fever): காய்ச்சல் சமயத்தில் மருந்து, மாத்திரைகளுடன் லேசான, எளிதில் ஜீரணிக்கக்கூடிய மற்றும் சத்தான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும.  இதனால் உடல் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் வலிமையைப் பெறுகிறது. சரியான உணவு முறை என்பது காய்ச்சலை குணமடைய வைக்கிறது.

நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் (Hydration foods in fever): அதிக காய்ச்சல் அதிகப்படியான வியர்வையை வெளியேற்றுகிறது. இதனால் நீர்ச்சத்து மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை இழக்க வேண்டிய சூழல் உருவாகிறது. ஆகவே,  அதிகளவில் தண்ணீர், இளநீர், எலுமிச்சை ஜூஸ், மோர், சூப் மற்றும் ஓ.ஆர்.எஸ். போன்ற திரவங்கள் குடிப்பது நன்மை அளிக்கிறது.

ADVERTISEMENT

சூடான வெஜிடபுள் சூப் அல்லது மெல்லிய பருப்பு சூப் ஆற்றலை வழங்குகிறது. இவை ஜீரணமாக எளிதாகவும் உள்ளன.  போதுமான திரவங்களை உட்கொள்வது நீரிழப்பு அபாயத்தைக் குறைக்கிறது, பலவீனத்தைக் குறைக்கிறது. காய்ச்சலில் இருந்து மீள்வதற்கு போதுமான திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சாப்பிடலாம் (Eat easily digestible foods): கிச்சடி, கஞ்சி, புழுங்கல் அரிசி, பருப்பு, வேகவைத்த காய்கறிகளை சாப்பிடலாம். இவற்றில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம் ஆகியவை உள்ளன. இது உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன. இதோடு ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி போன்ற பழங்கள் மற்றும் பருவகால பழங்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகின்றன. பருப்பு, வெண்டைக்காய் கஞ்சி, தயிர், வேகவைத்த முட்டை ஆகியவற்றை சாப்பிடுவது நன்மை அளிக்கும்.

ADVERTISEMENT

எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது (What foods should not be eaten fever time): அதிகமாக வறுத்த அல்லது காரமான உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. இவை செரிமான அமைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி வாயு, அமிலத்தன்மை மற்றும் வாந்தியை ஏற்படுத்தலாம். மக்கள் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காய்ச்சலின் போது ​பாஸ்ட் புட், வறுத்த உணவுகள், அதிக காரமான உணவுகள், குளிர் பானங்கள், தேநீர், காபி மற்றும் காஃபின் கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் உடலில் வீக்கத்தை அதிகரிக்கும் மற்றும் நீரிழப்பு அபாயத்தை அதிகரிக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share