THE BEGUILED: பெண்களை ஏமாற்றும் இராணுவ வீரன்!

Published On:

| By Balaji

வரலாறு என்பது அனைவரும் அறிந்து கொள்ள விரும்பும் ஒன்றாக இருந்தாலும் புத்தகம் படிக்க நேரமற்ற இந்த உலகில் எப்படி அது சாத்தியமாகும் என்பது பலரின் கேள்வியாக இருந்து வந்தது. எனவே புத்தகங்கள் மற்றும் நாவல்களை சில இயக்குநர்கள் திரைக்கு கொண்டு வரும் பணியைச் செய்து வரவேற்பு பெற்றூள்ளனர். அதே போல் கடந்த 1863 ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை நிகழ்வினை THAMAS P.CULLINAN என்ற எழுத்தாளர் SOUTHERN GOTHIC என்ற நாவலாக 1966 ஆம் ஆண்டே வெளியிட்டார். அந்த நாவலை 1971 ஆம் ஆண்டு THE BEGUILED என்ற திரைப்படமாக இயக்குநர் DON SIEGEL வெளியிட்டு வெற்றியும் கண்டார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நாவல்களை தழுவி வெளியாகியுள்ளன. ஆனால் தற்போது இருக்கும் பலருக்கும் பழைய வலராறு என்பது தெரியாது, பழைய திரைப்படங்களும் பார்த்தது கிடையாது என்பதனால், அதனையும் ரீமேக் செய்து புதிய வடிவில் வெளியிட்டு வருகின்றனர் சில இயக்குனர்கள். சிறந்த நாவல்களை திரையில் காணும் பொழுது அதன் ரசிப்புத்தன்மையும் கூடும் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை.

ADVERTISEMENT

அந்த வரிசையில் மேலே குறிப்பிட்ட SOUTHERN GOTHIC என்ற நாவலைத் தழுவிய THE BEGUILED திரைப்படத்தினை ரீமேக் செய்து இந்த ஆண்டு வெளியிடவுள்ளனர். இந்த திரைப்படத்தை பெண் இயக்குநர் Sofia Coppola இயக்கியுள்ளார். இதன் டிரைலர் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

வெளியுலகம் தெரியாமல் வளரும் ஒரு குறிப்பிட்ட பெண்கள் வட்டாரத்தில் ஒரு பெண் தனியே செல்லும் பொழுது ஒரு போர் வீரணை காயங்களுடன் கண்டு அதிர்ச்சியடைகிறாள். அவனை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வரும் நிலையில் அவன் அங்குள்ள பெண்களுடன் நெருங்கி பழகிவருகிறான். அப்போது அதனை பிற பெண்களுக்கு தெரியாமல் மறைத்து வரும் நிலையில் அதைக் கண்டறிந்த தலைமை ஆசிரியை அவனை சிறைக்கு அனுப்ப திட்டமிடுகிறார், முடியாத நிலையில் அவனை கொலை செய்ய உணவில் விஷம் கலக்க சொல்லி பெண்களுகளிடம் தெரிவிக்கிறார். அதன் பின் என்ன ஆனது என்பதே கதையின் முடிவு.

ADVERTISEMENT

இந்த டிரைலர் வந்த பின்னர் பெரும்பாலான் ரசிகர்கள் ஆர்வம் அதிகரித்தது. ஆனால் இதன் வெளியீடு ஜூன் மாதம் என்பதால் காத்திருக்க முடியாமல் பலரும் 1971 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தினை பதிவிறக்கம் செய்தும் , பழைய நாவலை தேடியும் வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share