டிஎஸ்பி சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி!

Published On:

| By Kavi

DSP Sundaresan has chest pain

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். DSP Sundaresan has chest pain

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கத் துறை டிஎஸ்பியாக பணியாற்றி வந்த டிஎஸ்பி சுந்தரேசன்,தனது அலுவலகத்துக்கு நடந்து செல்லும் வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து உயரதிகாரி ப்ரோட்டோகாலை மீறி தனது வாகனத்தை பறித்துக்கொண்டதாக காவல் துறை சீருடையில் பேட்டி அளித்திருந்தார் சுந்தரேசன்.

ADVERTISEMENT

தனது பேட்டியில் மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் முதல் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் வரை பல அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதையடுத்து, உரிய அனுமதி இன்றி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார் என டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து உள்துறை உத்தரவிட்டது.

இதற்கு, ”என்னை விசாரிக்காமல் பணியிடை நீக்கம் செய்ய டிஐஜி எப்படி பரிந்துரைக்க முடியும்?”என்று டிஎஸ்பி சுந்தரேசன் கேள்வி எழுப்பியிருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று (ஜூலை 23) காலை அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஐசியு பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. SP Sundaresan has chest pain

ADVERTISEMENT

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share